எனக்கு பயமாய் இருக்கிறது
உன் நினைவுகள் என்னுள் பெருகிவருகின்றன
மழைக்கால ஈசலாய்
ஓவ்வொருநாளும்
கண் விழித்திடுகையில்
கடவுளைவிட
நீதான் நினைவுக்கு வருகிறாய்
காலை மலர்களை கண்ணுருகையில்
நெஞ்சுக்குள் நிறைகிறாய் நீ
கதைகளை கவிதைகளை
ரசிக்கையில் - ஏனோ
உன் நினைவுகள் என்னை நிரப்புகின்றன
அந்தி சூரியனின் ஆனந்தத்தில்
உன் அபிநயங்கள் எந்தன் உள்ளத்தில்
கண் மூடும்போதும்
கனவுகளில் உயிர்த்திருக்கிறாய் நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்து கொண்டிருக்கிறேன் நான்
உன்னுள்
பயமாய் இருக்கிறது எனக்கு!!

0 comments:
Post a Comment