contact

Monday 20 December 2010

தண்டனை

யுகம் யுகமாய்
காத்திருந்தேன்
சுழலும் வாழ்க்கை சக்கரத்தில்
சுழலா அச்சாணியாய்  தேய்ந்திருந்தேன்
உன்னில் கரைந்துவிடவா?
உலகையே துச்சமாக நினைக்கும்  உள்ளம்
உன் கடைக்கண்  பார்வையில்
கடமை மறக்குதடி
யாருக்கும் அடங்கா காளையின்
மூக்கணாங்கயிறாயிருக்கிறாய்  நீ எனக்கு
சந்தோசங்களுக்கு குறைவில்லை என்றாலும்
அருகில் நீ இல்லையடி  சினேகிதி
கல்நெஞ்சம் காலத்திற்கா உனக்கா?
 எதாகிலும் தனிமை தண்டனை எனக்கா?

1 comments:

இராமநாதன் சாமித்துரை said...

"யுகம் யுகமாய்
காத்திருந்தேன்
சுழலும் வாழ்க்கை சக்கரத்தில்
சுழலா அச்சாணியாய் தேய்ந்திருந்தேன்"

உயர்தரமான வரிகள்.

அதற்கு அடுத்த வரிகளில் நீங்கள் காதலை பேசாது... வேறு "சமூக கோபம்" போன்ற பார்வை அமைத்திருந்தால் இந்த கவிதையின் உயரம் வேறாக இருந்திருக்குமோ?

Post a Comment