contact

Wednesday 18 August 2010

நாம் தமிழர்களா?

தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்றான் ஒரு கவி
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது ஒன்றுமில்லை
என்றான் ஒரு கவி
எல்லாம் பழங்கதையாகி போனது
ஊரெங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடுகள்
உண்மையில்
கன்னி தமிழ்
கற்பிழந்து விட்டது  பிற மொழி கலந்து
பேசும் இரண்டு மூன்று
வாக்கியங்களுக்குள்
நான்கைந்து பிறமொழி சொற்கள்
ஆரம்பம் முதலே ஆங்கில கல்வியாம்!
தமிழ் எழுத படிக்க தெரியாத
தமிழ்நாட்டு குழந்தைகள்
வரிவடிவமில்லா மொழிகளெல்லாம்
வாழ்விழந்து போனதை அறிந்திருந்தும்
தமிங்கிலிஷ் குறுந்தகவல்கள்
தமிழ் பேசினால் மட்டும்
நாம் தமிழர்களா?

3 comments:

இராமநாதன் சாமித்துரை said...

காசி.அனந்தனின் கவிதையில் தமிழா., நீ பேசுவது தமிழா? என்று வேதனை படுவார்..

அதே கோபத்தோடு நேர்கோடுகளில் படைக்கப்பட்ட கவிதை...

நன்று....தொடர்க.

அன்புடன்.,

இரா.சா.

யோகா.... said...

மிகவும் நன்றி அண்ணா

Ahamed irshad said...

தேவையான கோபம்தான்..

Post a Comment